Ezekiel 40:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நாங்கள் பாபிலோனில் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருடத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாம் நாளாகிய அன்றே யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினான்கு வருடங்களானது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நாங்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட இருபத்தைந்தாம் வருடத்தின் ஆரம்பத்தில், முதலாம் மாதத்தின் பத்தாம் நாளில், யெகோவாவினுடைய கரம் என்மீது இருந்தது. அந்த நாள் எருசலேம் வீழ்ச்சியடைந்த பதினான்காம் வருடம் முடிந்த நாளாயிருந்தது. அவர் அங்கு என்னை கொண்டுபோனார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருடத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாம் நாளாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினான்கு வருடங்களானது.
Tamil Bible Romanised 2017
naangga'l si'raippattuppoana irubaththainthaam varushaththin aarambaththil muthalaam maatham paththaantheathiyaagiya an'rea karththarudaiya kai enmeal amarnthathu, avar ennai avvidaththukkuk ko'ndupoanaar; appozhuthu nagaram azhikkappattup pathinaalu varushamaayit'ru.
Tamil OV
நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாந்தேதியாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினாலு வருஷமாயிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நாங்கள் சிறைப்பட்ட 25ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதலாம் மாதம் (அக்டோபர்) பத்தாம் நாளன்று கர்த்தருடைய வல்லமை என்மேல் வந்தது. பாபிலோனியர்கள் எருசலேமைப் பிடித்து 14 ஆண்டுகளாயிற்று, ஒரு தரிசனத்தில் கர்த்தர் என்னை அங்கே எடுத்துக்கொண்டு போனார்.