Ezekiel 41:7 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உயர உயரச் சுற்றிலும் பக்கஅறைளுக்கு அகலம் அதிகமாக இருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாக இருந்தது; ஆதலால் இப்படியாக கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாக மேல்நிலைக்கு ஏறும் வழி இருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆலயத்தைச் சுற்றியிருந்த பக்க அறைகள் ஒவ்வொரு தொடர்த்தளத்திலும் அகலத்தில் கூடியனவாய் இருந்தன. அறைகள் மேலே போகப்போக அகலத்தில் கூடியதாயிருக்கத்தக்கதாக, ஆலயத்தைச் சுற்றியிருந்த அமைப்பு உயர்ந்து கொண்டுபோகும் நிலையில் கட்டப்பட்டிருந்தது. கீழ்மாடியிலிருந்து மேல்மாடிக்குச் செல்ல மத்திய மாடிக்கூடவே படிவரிசையொன்று அமைக்கப்பட்டிருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உயர உயரச் சுற்றிலும் பக்கஅறைளுக்கு அகலம் அதிகமாக இருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாக இருந்தது; ஆதலால் இப்படியாக கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாக மேல்நிலைக்கு ஏறும் வழி இருந்தது.
Tamil Bible Romanised 2017
uyara uyarach sut'rilum sut'rukkattuga'lukku agalam athigamaayirunthathu; aalayaththaich sut'rilum uyara uyara aalayaththaich sut'rich sut'ri agalam varavara athigamaayirunthathu; aathalaal ivvithamaayk keezhnilaiyilirunthu nadunilaivazhiyaay mealnilaikku ea'rum vazhiyirunthathu.
Tamil OV
உயர உயரச் சுற்றிலும் சுற்றுக்கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாயிருந்தது; ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் மேல்நிலைக்கு ஏறும் வழியிருந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆலயத்தைச் சுற்றிலும் பக்கத்து அறைகளின் ஒவ்வொரு தளமும் கீழே உள்ள தளத்தைவிட அகலம் அதிகமாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றியுள்ள உயர மேடையானது ஒவ்வொரு தளத்திலும் ஆலயத்தைச் சுற்றிப் பரந்திருந்தது, எனவே, மேல் தளங்களின் அறைகள் அகலமாயிருந்தன. ஆதலால் கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளம் வழியாய் மேல் தளத்திற்கு ஏறும் வழி இருந்தது.