Ezekiel 44:24 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாக இருந்து, என்னுடைய நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என்னுடைய நியாயப்பிரமாணத்தையும் என்னுடைய கட்டளைகளையும் கைக்கொண்டு, என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கவேண்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ ‘எந்தப் பிரச்சனைகளிலும் ஆசாரியர்கள் நீதிபதிகளாய்ப் பணிபுரிந்து அதை எனது சட்டதிட்டங்களுக்கேற்ப தீர்மானிக்கவேண்டும். அவர்கள் எனது சட்டங்களையும், நியமிக்கப்பட்டுள்ள எனது எல்லா பண்டிகைகளில் என் கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். எனது ஓய்வுநாட்களையும் பரிசுத்தமாய்க் கடைப்பிடிக்கவேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாக இருந்து, என்னுடைய நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என்னுடைய நியாயப்பிரமாணத்தையும் என்னுடைய கட்டளைகளையும் கைக்கொண்டு, என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கவேண்டும்.
Tamil Bible Romanised 2017
vazhakkirunthaal avarga'l niyaayantheerkka aayaththamaayirunthu, en niyaayangga'linpadi athaith theerththu, ennudaiya pa'ndigaiga'lil ellaam en niyaayappiramaa'naththaiyum en katta'laiga'laiyum kaikko'ndu, en oayvunaadka'laip parisuththamaakkakkadavarga'l.
Tamil OV
வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாயிருந்து, என் நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என் நியாயப்பிரமாணத்தையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கக்கடவர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆசாரியர்கள் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருப்பார்கள். எனவே, ஜனங்களை அவர்கள் நியாயம்தீர்க்கும்போது எனது சட்டங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். எனது அனைத்து சிறப்புப் பண்டிகைகளிலும் அவர்கள் என் நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையுமே கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் எனது சிறப்பு ஓய்வு நாட்களை மதித்து அவற்றைப் பரிசுத்தமாகக் கைக்கொள்ள வேண்டும்.