Ezekiel 47:19 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தெற்கு மூலையான தெற்கு பக்கம் தாமார் துவங்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்வரை, ஆறுவரை மத்திய தரைக் கடல்வரையாகவும் இருப்பது; இது தெற்குமூலையான தென்புறம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தெற்குப் பக்கத்திலுள்ள எல்லை, தாமாரிலிருந்து காதேஸ் மேரிபாவின் நீர்நிலைகளை அடைந்து, எகிப்தின் நீரோடை வழியாக மத்திய தரைக்கடல்வரை செல்லும். இதுவே தெற்கு எல்லையாயிருக்கும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தெற்கு மூலையான தெற்கு பக்கம் தாமார் துவங்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்வரை, ஆறுவரை பெரிய கடல்வரையாகவும் இருப்பது; இது தெற்குமூலையான தென்புறம்.
Tamil Bible Romanised 2017
thenmoolaiyaana thenpu'ram thaamaar thuvakki, kaatheasilu'l'la sa'ndaimoottuthalin tha'n'neerga'lmattaagavum, aa'rumattaagavum, periya samuththiramattaagavum iruppathu; ithu thenmoolaiyaana thenpu'ram.
Tamil OV
தென்மூலையான தென்புறம் தாமார்துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் மட்டாகவும், ஆறுமட்டாகவும். பெரிய சமுத்திரமட்டாகவும் இருப்பது; இது தென்மூலையான தென்புறம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“தென் புறத்தில், எல்லையானது, தாமார் தொடங்கி மெரிபா காதேஷின் பாலைவனச் சோலைவரை இருக்கும். பிறகு இது எகிப்து ஆற்றிலிருந்து மத்தியதரை கடல் வரை போகும். இது தென்னெல்லையாக இருக்கும்.