Ezekiel 48:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கோத்திரங்களின் பெயர்கள்: வடக்கு முனைதுவங்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்திற்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கிழக்குதிசை துவங்கி மேற்கிலுள்ள மத்திய கடல் திசைவரை தாணுக்கு ஒரு பங்கும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“பெயர் வரிசைப்படியுள்ள கோத்திரங்கள் இவையே: “நாட்டின் வட எல்லையில், தாண் ஒரு பங்கைப் பெறுவான்; அது எத்லோன் வீதியிலிருந்து, ஆமாத்தின் நுழைவு வாசல் வரைக்கும் தொடரும். ஆமாத்திற்கு அடுத்ததாக ஆசார் ஏனானும், தமஸ்குவின் வடக்கு எல்லையும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலுமுள்ள அதன் எல்லையின் ஒரு பகுதியாயிருக்கும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கோத்திரங்களின் பெயர்கள்: வடக்கு முனைதுவங்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்திற்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை தாணுக்கு ஒரு பங்கும்,
Tamil Bible Romanised 2017
koaththirangga'lin naamangga'laavana: vadamunaithuvakki aamaaththukkuppoagi'ra ethloan vazhiyin oaraththukkum, aathsaareanaanukkum, aamaaththarugea vadakkeayirukki'ra thamaskuvin ellaikkum u'l'laagak keezhththisai thuvakki meat'risaimattum thaa'nukku oru panggum,
Tamil OV
கோத்திரங்களின் நாமங்களாவன: வடமுனைதுவக்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்துக்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் தாணுக்கு ஒரு பங்கும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“வடக்கெல்லையானது, மத்தியதரைக் கடலிலிருந்து கிழக்கு நோக்கி எத்லோன் வழியாக ஆமாத்துக்குப் போகும். பிறகு அது ஆத்சார் ஏனானுக்குப் போகும். இது தமஸ்குவுக்கும் ஆமாத்துக்கும் இடையிலுள்ள எல்லை. கிழக்கு எல்லையிலிருந்து மேற்கு எல்லைவரை இத்தேசம் கோத்திரங்களுக்கு உரியதாகும். வடக்கிலிருந்து தெற்கு வரை இப்பகுதி தாண், ஆசேர், நப்தலி, மனாசே, எப்பிராயீம், ரூபன், யூதா ஆகிய கோத்திரங்களுக்குரியதாகும்.