Ezekiel 48:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வடக்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும், மேற்கே பத்தாயிரம்கோல் அகலமும், கிழக்கே பத்தாயிரம்கோல் அகலமும், தெற்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமானது ஆசாரியருடையதாக இருக்கும்; யெகோவாவுடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இது ஆசாரியருக்கான பரிசுத்த பகுதியாயிருக்கும். அது வடக்குப்புறம் 25,000 முழ நீளமாயும், மேற்குப்புறம் 10,000 முழ அகலமாயும், கிழக்குப்புறம் 10,000 முழ அகலமாயும், தெற்குப்புறம் 25,000 முழ நீளமாயும் இருக்கும். அதன் நடுவில் யெகோவாவின் பரிசுத்த ஆலயம் இருக்கும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வடக்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும், மேற்கே பத்தாயிரம்கோல் அகலமும், கிழக்கே பத்தாயிரம்கோல் அகலமும், தெற்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமானது ஆசாரியருடையதாக இருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
Tamil Bible Romanised 2017
vadakkea irubaththaiyaayirangkoal nee'lamum, mea'rkea pathinaayirangkoal agalamum, kizhakkea pathinaayirangkoal agalamum, the'rkea irubaththaiyaayirangkoal nee'lamumaagiya inthap parisuththa arppithanilamaanathu aasaariyarudaiyathaayirukkum; karththarudaiya parisuththa sthalam athin naduvilea iruppathaaga.
Tamil OV
வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இத்தனியான பகுதி ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படவேண்டும். “ஆசாரியர்கள் இதன் ஒரு பகுதியைப் பெறுவார்கள். இப்பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக வடபுறத்திலும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமாக மேற்கு புறத்திலும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமாக கிழக்குப் புறத்திலும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக தெற்கு புறத்திலும் இருக்கும். இப்பகுதியின் நடுவில் கர்த்தருடைய ஆலயம் அமைக்கப்படும்.