Ezekiel 5:7 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளைவிட அதிகரிக்கிறவர்களாகிய நீங்கள் என்னுடைய கட்டளைகளிலே நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியோ நடக்காமலும் போனபடியினாலே,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் உங்களைச் சுற்றிலும் இருக்கிற தேசத்தாரைப் பார்க்கிலும் அடங்காதவர்களாயிருந்தீர்கள். நீங்கள் எனது கட்டளைகளையோ, சட்டங்களையோ பின்பற்றவும் கைக்கொள்ளவும் இல்லை. உங்களைச் சுற்றிலும் இருக்கிற பிறநாடுகளின் ஒழுங்குவிதிகளின்படி நடந்துகொள்ளவும் இல்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளைவிட அதிகரிக்கிறவர்களாகிய நீங்கள் என்னுடைய கட்டளைகளிலே நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியோ நடக்காமலும் போனபடியினாலே,
Tamil Bible Romanised 2017
aagaiyaal karththaraagiya aa'ndavar sollugi'rathu ennaven'raal, ungga'laich sut'rilum irukki'ra pu'rajaathiga'laippaarkkilum athigarikki'ravarga'laagiya neengga'l en katta'laiga'lilea nadavaamalum, en niyaayangga'linpadi seyyaamalum, ungga'laich sut'rilum irukki'ra pu'rajaathiga'ludaiya neethiniyaayangga'linpadiyaavathu nadavaamalum poanapadiyinaalea,
Tamil OV
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளைப்பார்க்கிலும் அதிகரிக்கிறவர்களாகிய நீங்கள் என் கட்டளைகளிலே நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “நான் உனக்குப் பயங்கரமானவற்றைச் செய்வேன்; ஏனென்றால், நீ எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. நீ எனது கட்டளைகளுக்கு அடிபணியவில்லை. உன்னைச் சுற்றியுள்ள ஜனங்களை விட நீ எனது சட்டங்களை அதிகமாக மீறினாய்! உன்னைச் சுற்றியிருக்கும் நாடுகள் தவறு என கருதும் குற்றங்களையும் கூட நீ செய்தாய்!”