Ezekiel 8:3 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என்னுடைய தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார்; தேவ ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்திற்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடக்குதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகத்தின் இடம் இருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கை போன்று காணப்பட்டதொன்றை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார். ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவாகத் தூக்கி, இறைவனின் தரிசனத்தில் அவர் என்னை எருசலேமின் உள்முற்றத்தின் வடக்கு திசைக்கு கொண்டுபோனார். அங்கே எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகம் இருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என்னுடைய தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார்; ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்திற்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடக்குதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகத்தின் இடம் இருந்தது.
Tamil Bible Romanised 2017
kaipoal thoan'rinathai avar neetti, en thalaimayiraip pidiththu ennaith thookkinaar; aaviyaanavar ennaip boomikkum vaanaththukkum naduvea ko'ndupoay, theavatharisanaththilea ennai erusaleamil vadathisaikku ethiraana u'lvaasalin nadaiyilea vittaar; anggea erichchalu'ndaakkugi'ra vikkiragaththin sthaanam irunthathu.
Tamil OV
கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார்; ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு நான் கையைப்போன்று தோன்றிய ஒன்றைப் பார்த்தேன். அவர் தன் கையை நீட்டி என் தலைமயிரைப் பிடித்துத் தூக்கினார். பின்னர் ஆவியானவர் என்னைத் தூக்கிக்கொண்டு, தேவதரிசனத்திலே என்னை எருசலேமிற்குக் கொண்டுபோனார். அவர் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையில்விட்டார். தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற சிலையும் அங்கே இருந்தது.