Ezra 10:14 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால் இதற்கு சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரர்களாக ஏற்படுத்தப்படவேண்டும்; இந்தக் காரியத்தினால் நம்முடைய தேவனுக்கு இருக்கிற கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் வேறு இனமான பெண்களைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரவேண்டும் என்றார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே இந்தக் காரியத்தில் எங்கள் அதிகாரிகள் முழுச் சபைக்காகவும் செயல்படட்டும். இதினிமித்தம் நம்முடைய இறைவனின் கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் அந்நிய பெண்ணைத் திருமணம் செய்த ஒவ்வொருவனும் அந்தந்தப் பட்டணத்தைச் சேர்ந்த முதியவர்களுடனும், நீதிபதிகளுடனும் குறிப்பிட்ட நேரத்தில் வரட்டும்” என்றார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகையால் இதற்கு சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரர்களாக ஏற்படுத்தப்படவேண்டும்; இந்தக் காரியத்தினால் நம்முடைய தேவனுக்கு இருக்கிற கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் வேறு இனமான பெண்களைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரவேண்டும் என்றார்கள்.
Tamil Bible Romanised 2017
aagaiyaal itha'rkuch sabaiyenggum engga'l pirabukka'l visaarippukkaararaaga vaikkappadavea'ndum; inthak kaariyaththinimiththam nammudaiya theavanukku irukki'ra ukkirakoabam engga'lai vittuth thirumbumpadi, engga'l patta'nangga'lil ma'rujaathiyaana sthireega'laikko'nda anaivarum ovvoru patta'naththin moopparoadum niyaayaathibathiga'loadum ku'riththakaalangga'lil varakkadavarga'l en'raarga'l.
Tamil OV
ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும்; இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இங்கே கூடியுள்ள அனைவருக்காகவும் எங்கள் தலைவர்கள் முடிவுச் செய்யட்டும். எங்கள் நகரங்களில் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள் எல்லாம் ஒரு திட்டமிட்ட நாளில் இங்கே எருசலேமில் கூடட்டும். அவர்கள் இங்கு மூப்பர்களோடும் நகர நீதிபதிகளோடும் வரட்டும். பிறகு எங்கள் மீது தேவன் கோபங்கொள்ளாமல் இருப்பார்” என்றனர்.