Ezra 10:2 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது ஏலாமின் மகன்களில் ஒருவனாகிய யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து மக்களிலுள்ள அந்நியப் பெண்களைச் சேர்த்துக்கொண்டதால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது ஏலாமின் வழித்தோன்றலில் ஒருவனான யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவிடம், “நாங்கள் எங்களைச் சுற்றியுள்ள மக்கள் மத்தியில் இருந்து அந்நிய பெண்களைத் திருமணம் செய்ததினால் எங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களானோம். ஆனாலும் இது நடந்தும்கூட இஸ்ரயேலருக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது ஏலாமின் மகன்களில் ஒருவனாகிய யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து மக்களிலுள்ள அந்நியப் பெண்களைச் சேர்த்துக்கொண்டதால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
Tamil Bible Romanised 2017
appozhuthu ealaamin puththiraril oruvanaagiya yegiyealin kumaaran sekkaniyaa es'raavai noakki: naangga'l theasaththu janangga'lilu'l'la anniya sthireega'laich searththukko'ndathinaal, engga'l theavanukku viroathamaagap paavagnseythoam; aagilum ippozhuthu inthak kaariyaththilea innum isravealukkaaga nambikkai u'ndu.
Tamil OV
அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அப்போது ஏலாமின் சந்ததியில் ஒருவனான, யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவிடம் பேசினான். செக்கனியா, “நான் நமது தேவனிடம் உண்மையாக இருக்கவில்லை. நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் மணந்துக்கொண்டோம். ஆனால் நாங்கள் இதைச் செய்திருந்தாலும், இஸ்ரவேலுக்கான நம்பிக்கை இன்னும் இருக்கிறது.