Ezra 2:61 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தாரே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோஸ், அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சில்லாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சில்லாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தாரே.
Tamil Bible Romanised 2017
aasaariyarin puththiraril abaayaavin puththirar, koasin puththirar, keeleayaaththiyanaana barsilaayin kumaaraththiga'lil oruththiyai vivaagampa'n'ni, avarga'l vamsa naamam tharikkappatta barsillaayin puththirarea.
Tamil OV
ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்சநாமம் தரிக்கப்பட்ட பர்சிலாயின் புத்திரரே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆசாரியர்களின் குடும்பங்களில் இருந்து வரும் சந்ததியினரின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: அபாயா, கோஸ், பர்சிலாய் (ஒருவன் பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். அவனும் பர்சிலாயின் சந்ததியினரோடு சேர்த்து எண்ணப்பட்டான்.)