Ezra 9:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடம் வந்து: இஸ்ரவேல் மக்களும், ஆசாரியர்களும் லேவியர்களும் ஆகிய இவர்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், அம்மோனியர்கள், மோவாபியர்கள், எகிப்தியர்கள், அம்மோரியர்கள் என்னும் இந்த தேசங்களின் மக்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவை செய்யப்பட்டதன் பின் தலைவர்கள் என்னிடம் வந்து, “இஸ்ரயேல் மக்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகியோர் தங்கள் அயலவர்களிடமிருந்து பிரிந்திருக்கவில்லை. கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகிய அயலில் உள்ள மக்களின் அருவருப்பான செயல்களில் இவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடம் வந்து: இஸ்ரவேல் மக்களும், ஆசாரியர்களும் லேவியர்களும் ஆகிய இவர்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், அம்மோனியர்கள், மோவாபியர்கள், எகிப்தியர்கள், அம்மோரியர்கள் என்னும் இந்த தேசங்களின் மக்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.
Tamil Bible Romanised 2017
ivaiga'l seythu mudinthapinbu, pirabukka'l ennidaththil searnthu: israveal janangga'lum, aasaariyarum leaviyarum aagiya ivarga'l, kaanaaniyar, eaththiyar, perisiyar, eboosiyar, ammoaniyar, moavaabiyar, egipthiyar, ammoariyar ennum intha theasangga'lin janangga'lukkum, avarga'ludaiya aruvaruppuga'lukkum vilagiyirukkavillai.
Tamil OV
இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவை அனைத்தையும் செய்து முடிந்த பிறகு, இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள், “எஸ்றா, இஸ்ரவேல் ஜனங்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. இவர்கள், கானானியர், ஏத்தியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எம்மோரியர் ஆகிய ஜனங்களால் பாதிப்புக்குள்ளாகி, அவர்களின் தீயச் செயல்களுக்கும் ஆளானார்கள்.