Galatians 3:18 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அன்றியும், உரிமைப்பங்கானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிருக்காது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமைச்சொத்து மோசேயின் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டால், அது வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் கொடுக்கப்படவில்லை என்றே அர்த்தமாகிறது. ஆனால் இறைவனோ, தம்முடைய கிருபையினால் அந்த உரிமைச்சொத்தை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தின்படியே கொடுத்தார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமைச் சொத்தானது, நீதிச்சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுமானால், அது வாக்குறுதியின் அடிப்படையில் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் இறைவனோ தமது கிருபையினால் அதை ஒரு வாக்குறுதியின் மூலமாக ஆபிரகாமுக்குக் கொடுத்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அன்றியும், உரிமைப்பங்கானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிருக்காது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.
Tamil Bible Romanised 2017
an'riyum, suthantharamaanathu niyaayappiramaa'naththinaalea u'ndaanaal athu vaakkuththaththaththinaalea u'ndaayiraathu; theavan athai aabirahaamukku vaakkuththaththaththinaalea aru'lichseythaarea.
Tamil OV
அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனுடைய வாக்குறுதியை நாம் சட்டங்களைப் பின்பற்றி வருவதன் மூலம் அடைய முடியுமா? முடியாது. அப்படியானால் தேவன் கொடுத்தது வாக்குறுதி ஆகாது. ஆனால் தேவனோ தன் ஆசீர்வாதங்களைத் தன் வாக்குத்தத்ததின் மூலம் இலவசமாய் ஆபிரகாமுக்குக் கொடுத்தார்.