Galatians 5:14 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல், உன் அயலவனிலும் அன்பாய் இரு” என்கிற, ஒரே கட்டளையிலே மோசேயின் சட்டம் முழுவதுமே அடங்கியிருக்கிறது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“நீ உன்னில் அன்பாய் இருப்பது போல், உன் அயலவனிலும் அன்பாய் இரு” என்ற ஒரே கட்டளையின் ஊடாக நீதிச்சட்டம் முழுவதுமே நிறைவேற்றப்படுகிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
Tamil Bible Romanised 2017
unnidaththil nee anbukooruvathupoalap pi'ranidaththilum anbukooruvaayaaga, engi'ra intha orea vaarththaiyilea niyaayappiramaa'nam muzhuvathum ni'raivea'rum.
Tamil OV
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“உன்னை நீ நேசிப்பது போன்று மற்றவர்களையும் நேசிப்பாயாக” என்ற ஒரு வாக்கியத்திலேயே மொத்த சட்டமும் அடங்கி இருக்கிறது.