Genesis 3:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது தேவனாகிய யெகோவா பெண்ணை நோக்கி: “நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: “பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன்” என்றாள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பின்பு இறைவனாகிய யெகோவா அந்த பெண்ணிடம், “நீ செய்திருக்கும் இந்தக் காரியம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, அதனால்தான் நான் சாப்பிட்டேன்” என்று சொன்னாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் பெண்ணை நோக்கி: நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன் என்றாள்.
Tamil Bible Romanised 2017
appozhuthu theavanaagiya karththar sthireeyai noakki: nee ippadich seythathu enna en'raar. sthireeyaanava'l: sarppam ennai vagnchiththathu, naan pusiththean en'raa'l.
Tamil OV
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு தேவனாகிய கர்த்தர் பெண்ணிடம், “நீ என்ன காரியத்தைச் செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “பாம்பு என்னை வஞ்சித்துவிட்டது. எனவே நான் பழத்தை உண்டுவிட்டேன்” என்றாள்.