Hebrews 12:17 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏனென்றால், பின்பதாக அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும், தகுதியற்றவன் என்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடு தேடியும் மனம் மாறுதலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீங்கள் அறிந்திருக்கிறபடி, அவன் இந்த ஆசீர்வாதத்தைத் திரும்பவும் பெற்றுக்கொள்ள விரும்பியபோதும், அவன் புறக்கணிக்கப்பட்டான். இந்த ஆசீர்வாதத்தை அவன் கண்ணீருடன் தேடியபோதும், அவனுக்கு அந்நிலையை மாற்றமுடியவில்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நீங்கள் அறிந்திருக்கின்றபடி அவன் இந்த ஆசீர்வாதத்தைத் திரும்பவும் பெற்றுக்கொள்ள விரும்பியபோதும், அவன் புறக்கணிக்கப்பட்டான். இந்த ஆசீர்வாதத்தை அவன் கண்ணீருடன் தேடியபோதும் அவனுக்கு அந்நிலையை மாற்ற முடியவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏனென்றால், பின்பதாக அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும், தகுதியற்றவன் என்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடு தேடியும் மனம் மாறுதலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
Tamil Bible Romanised 2017
eanen'raal, pi'rpaadu avan aaseervaathaththaich suthanthariththukko'l'la virumbiyum aagaathavanen'ru tha'l'lappattathai a'riveerga'l; avan ka'n'neervittu, kavalaiyoadea theadiyum manam maa'ruthalaik kaa'naama'rpoanaan.
Tamil OV
ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு ஏசா ஆசியைப்பெற விரும்பிய போதிலும், கண்ணீர்விட்டுக் கதறிக் கெஞ்சினாலும் கூட அவனால் அதைப் பெற முடியவில்லை. ஏனெனில் மனமாறுதலுக்கு வழி காணாமல் போனான்.