Hebrews 4:13 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
படைப்பு எல்லாவற்றிலும் எதுவும் இறைவனின் பார்வையிலிருந்து மறைவாய் இருப்பதில்லை. எல்லாம் அவருடைய கண்களுக்கு முன்பாக மறைக்கப்படாமலும், வெளியரங்கமாக்கப்பட்டும் இருக்கின்றன. அவருக்கே நாம் செய்த எல்லாவற்றிற்கும் கணக்குக் கொடுக்கவேண்டும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அத்துடன் படைக்கப்பட்ட எந்த ஒரு உயிரினமும் அவருடைய பார்வையில் இருந்து மறைக்கப்படவில்லை. நாம் செய்த எல்லாவற்றிற்கும் நாம் இறைவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. அவரது கண்களுக்கு முன்பாக எதுவுமே மறைக்கப்படாமலும் எல்லாமே பகிரங்கமாயும் இருக்கின்றன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
Tamil Bible Romanised 2017
avarudaiya paarvaikku ma'raivaana sirushdi on'rumillai; sagalamum avarudaiya ka'nga'lukkumunbaaga nirvaa'namaayum ve'liyaranggamaayumirukki'rathu, avarukkea naam ka'nakku oppuvikkavea'ndum.
Tamil OV
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை. அனைத்தையும் அவரால் தெளிவாகக் காணமுடியும். அவருக்கு முன் எல்லாமே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழ்ந்த முறையை அவரிடம் விவரிக்க வேண்டும்.