Hebrews 7:1 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான்; ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இந்த மெல்கிசேதேக்கு, சாலேமின் அரசனும், மகா உன்னதமான இறைவனின் ஆசாரியனுமாயிருந்தான். ஆபிரகாம் அரசர்களைத் தோற்கடித்து திரும்பிவந்து கொண்டிருந்தபோது, இவன் ஆபிரகாமைச் சந்தித்து ஆசீர்வதித்தான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மெல்கிசேதேக்கு என்பவர் சாலேம் பட்டணத்து அரசனாகவும் அதி உன்னதமான இறைவனின் மதகுருவாகவும் இருந்தார். ஆபிரகாம், போர்க் களத்தில் அரசர்களை கொன்றழித்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தபோது மெல்கிசேதேக்கு ஆபிரகாமைச் சந்தித்து அவரை ஆசீர்வதித்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான்; ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
Tamil Bible Romanised 2017
intha melkiseatheakku saaleamin raajaavum, unnathamaana theavanudaiya aasaariyanumaayirunthaan; raajaakka'lai mu'riyadiththuvantha aabirahaamukku ivan ethirko'ndupoay, avanai aaseervathiththaan.
Tamil OV
இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மெல்கிசேதேக் சாலேமின் ராஜா. அவன் மிக உயர்ந்த தேவனுடைய ஆசாரியனுமாகவும் இருந்தான். ராஜாக்களை வென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமை மெல்கிசேதேக் சந்தித்து ஆசிவழங்கினான்.