Hebrews 7:13 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவைகள் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனும் பலிபீடத்து ஊழியம் செய்தது இல்லையே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவையெல்லாம் கிறிஸ்துவைக்குறித்தே சொல்லப்படுகின்றன. அவரோ வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர், அந்த கோத்திரத்தைச் சேர்ந்த யாருமே பலிபீடத்தில் பணியாற்றவில்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவையெல்லாம் எந்தக் குருவை கருத்திற்கொண்டு சொல்லப்பட்டனவோ, அவர் லேவியின் கோத்திரமல்லாத வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர். அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த யாருமே பலிபீடத்தில் ஒருபோதும் பணியாற்றியதில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவைகள் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனும் பலிபீடத்து ஊழியம் செய்தது இல்லையே.
Tamil Bible Romanised 2017
ivaiga'l evaraikku'riththuch sollappattirukki'rathoa, avar vea'roru koaththiraththukku'l'laanavaraayirukki'raarea; anthak koaththiraththil oruvanaagilum balipeedaththu oozhiyam seythathillaiyea.
Tamil OV
இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ. அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எப்போதும் ஒரு ஆசாரியனாக சேவை செய்திராத ஒரு குடும்பக் குழுவினைச் சேர்ந்த ஒரு மனிதரைப் பற்றி இப்பகுதிகள் பேசுகின்றன.