Hebrews 7:5 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
லேவியின் குமாரர்களில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் வம்சத்திலிருந்து வந்த தங்களுடைய சகோதரர்களான மக்களிடம் நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைப் பெற்றிருக்கிறார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
லேவியின் தலைமுறையினர்களில் ஆசாரியர்களாகிறவர்கள், மக்களிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்ளும்படி, மோசேயின் சட்டம் வலியுறுத்துகிறது. அவர்கள் ஆபிரகாமின் சந்ததிகளும், லேவியர்களின் சகோதரர்களாயிருந்தும், இப்படிக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
லேவியின் தலைமுறையினர்களில் மதகுருக்களாய் இருக்கின்றவர்கள், மக்களிடமிருந்து பத்தில் ஒரு பங்கை உரிமையோடு பெற்றுக்கொள்ளும்படி நீதிச்சட்டம் வலியுறுத்துகிறது. அந்த மக்கள் ஆபிரகாமின் சந்ததியைச் சேர்ந்தவர்களாக, அதிலும் தங்களது சொந்த சகோதரர்களாக இருந்தும், அவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளும்படி கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
லேவியின் குமாரர்களில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் வம்சத்திலிருந்து வந்த தங்களுடைய சகோதரர்களான மக்களிடம் நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைப் பெற்றிருக்கிறார்கள்.
Tamil Bible Romanised 2017
leaviyin puththiraril aasaariyaththuvaththai adaigi'ravarga'lum, aabirahaamin araiyilirunthuvantha thangga'l sagoathararaana janangga'lin kaiyilea niyaayappiramaa'naththinpadi thasamapaagam vaanggugi'ratha'rkuk katta'laipet'rirukki'raarga'l.
Tamil OV
லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இப்போது லேவியின் வாரிசுதாரர்களாக உள்ள ஆசாரியர்கள் இஸ்ரவேலைச் சேர்ந்த மக்களிடமிருந்து பத்தில் ஒருபாகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென சட்டம் கூறுகிறது. அதாவது ஆபிரகாமின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் கூட மக்களிடமிருந்து இந்த பத்தில் ஒரு பங்கை அவர்கள் வசூலிக்கிறார்கள்.