Hosea 10:11 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற இளம்கன்றாக இருக்கிறான்; ஆனாலும் நான் அவனுடைய அழகான கழுத்தின்மேல் பாரத்தை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்கு வயலை சமப்படுத்துவான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எப்பிராயீம் சூடு அடிக்க விரும்புகின்ற பயிற்றுவிக்கப்பட்ட கன்னிப்பசு. நான் அதன் கழுத்தின்மேல் பாரத்தை வைக்கவில்லை. ஆனால் இப்பொழுது நான் அதன் அழகான கழுத்தின்மேல் ஒரு நுகத்தை வைப்பேன். நான் எப்பிராயீமை கடுமையான வேலைக்கு நடத்துவேன்; யூதாவும் நிலத்தை உழவேண்டும், யாக்கோபின் எல்லா மக்களும் நிலத்தின் மண் கட்டிகளை உடைக்கவேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற இளம்கன்றாக இருக்கிறான்; ஆனாலும் நான் அவனுடைய அழகான கழுத்தின்மேல் பாரத்தை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்கு வயலை சமப்படுத்துவான்.
Tamil Bible Romanised 2017
eppiraayeem nan'raayp pazhakkappattup poaradikka virumbugi'ra kadaariyaayirukki'raan; aanaalum naan avan azhagaana kazhuththinmeal nugaththadiyai vaippean; eppiraayeemai ear pootti oattuvean; yoothaa uzhuvaan, yaakkoabu avanukkup parampadippaan.
Tamil OV
எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்ட போரடிக்கும் களத்திலுள்ள தானியங்களின் மேல் நடக்க விரும்பும், இளம் காளையைப் போன்றவன். அவன் கழுத்தில் நான் ஒரு நல்ல நுகத்தடியை மாட்டுவேன். நான் எப்பிராயீமை கயிற்றால் கட்டுவேன். பிறகு யூதா உழவுசெய்யத் தொடங்குவான். யாக்கோபு தானாகவே பரம்படிப்பான்.