Hosea 3:5 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பி, தங்கள் தேவனாகிய யெகோவாவையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் யெகோவாவையும், அவருடைய தயவையும் நாடி நடுக்கத்துடன் வருவார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவற்றுக்குப்பின் இஸ்ரயேலர் திரும்ப வந்து, தங்களது இறைவனாகிய யெகோவாவையும், அரசனாகிய தாவீதையும் தேடுவார்கள். கடைசி நாட்களில் அவர்கள் யெகோவாவையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் நாடி, நடுக்கத்துடன் வருவார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி நடுக்கத்துடன் வருவார்கள்.
Tamil Bible Romanised 2017
pinbu israveal puththirar thirumbi, thangga'l theavanaagiya karththaraiyum, thangga'l raajaavaagiya thaaveethaiyum theadi, kadaisinaadka'lil karththaraiyum, avarudaiya thayavaiyum naadi agnchikkaiyaay varuvaarga'l.
Tamil OV
பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இதற்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பி வருவார்கள். பிறகு அவர்கள் தம் தேவனாகிய கர்த்தரையும் ராஜாவாகிய தாவீதையும்காண வருவார்கள். இறுதி நாட்களில் அவர்கள் கர்த்தரையும் அவரது நன்மைகளையும் பெருமைப்படுத்த வருவார்கள்.