Isaiah 1:29 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீங்கள் விரும்பி தெரிந்துக்கொண்ட கர்வாலிமரங்களுடைய தோப்புகளுக்காக வெட்கப்படுவீர்கள்;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“நீங்கள் விருப்பத்துடன் வணங்கிய புனித கர்வாலி மரங்களின் நிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் வழிபாட்டுக்கெனத் தெரிந்துகொண்ட தோட்டங்களினிமித்தம் அவமானப்படுவீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களுக்காக வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளுக்காக வெட்கமடைவீர்கள்.
Tamil Bible Romanised 2017
neengga'l virumbina karvaalimarangga'linimiththam vedkappaduveerga'l; neengga'l therinthuko'nda thoappuga'linimiththam naa'namadaiveerga'l.
Tamil OV
நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீங்கள் தொழுதுகொள்வதற்கு தேர்ந்தெடுத்த கருவாலி மரங்களையும் தோப்புகளையும் கண்டு வருங்காலத்தவர்கள் அவமானப்படுவார்கள்.