Isaiah 14:20 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ அவர்களுடன் அடக்கம் செய்யப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் மக்களைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் கனமடைவதில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்த அரசர்களுடன் நீ அடக்கம் செய்யப்படமாட்டாய். ஏனெனில் உனது நாட்டையே நீ அழித்து உன் மக்களைக் கொன்றாய். கொடியவரின் சந்ததியினரைக் குறித்து இனியொருபோதும் சொல்லப்பட மாட்டாது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ அவர்களுடன் அடக்கம் செய்யப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் மக்களைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் கனமடைவதில்லை.
Tamil Bible Romanised 2017
nee avarga'loadea adakkam pa'n'nappaduvathillai; nee un theasaththaik keduththu un janaththaik kon'rupoattaay; theemaiseygi'ravarga'ludaiya santhathi orupoathum pearpe'ruvathillai.
Tamil OV
நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மற்ற ராஜாக்கள் பலர் மரித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தம் சொந்தக் கல்லறைகளை வைத்துள்ளனர். ஆனால், நீ அவர்களோடு சேரமாட்டாய். ஏனென்றால், நீ உன் சொந்த நாட்டை அழித்துவிட்டாய். நீ உன் சொந்த ஜனங்களைக் கொன்றாய். நீ செய்ததுபோல உன் பிள்ளைகள் தொடர்ந்து, அழிவு வேலைகளைச் செய்யமாட்டார்கள். உன் பிள்ளைகள் நிறுத்தப்படுவார்கள்.