Isaiah 26:19 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இறந்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களுடன் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பயிர்களின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; இறந்தவர்களைப் பூமி புறப்படச்செய்யும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனாலும் மரித்த உமது மக்கள் உயிர்வாழ்வார்கள்; அவர்களின் உடல்கள் உயிர்த்தெழும்பும். புழுதியில் வாழ்பவர்களே, எழுந்து மகிழ்ந்து சத்தமிடுங்கள். உமது பனி காலைப் பனிபோல் இருக்கிறது; பூமி தனது மரித்தோரைப் பெற்றெடுக்கும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இறந்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களுடன் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பயிர்களின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; இறந்தவர்களைப் பூமி புறப்படச்செய்யும்.
Tamil Bible Romanised 2017
mariththa ummudaiyavarga'l pireathamaana ennudaiyavarga'loadea kooda ezhunthiruppaarga'l; ma'n'nilea thanggiyirukki'ravarga'lea, vizhiththuk kembeeriyungga'l; ummudaiya pani poo'nduga'linmeal peyyum panipoal irukkum; mariththoaraip boomi pu'rappadappa'n'num.
Tamil OV
மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் கர்த்தர் கூறுகிறார், “உம்முடைய ஜனங்கள் மரித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் வாழ்வார்கள். எங்கள் ஜனங்களின் உடல்களும் மரணத்திலிருந்து எழும். மரித்த ஜனங்கள் மண்ணிலிருந்து எழுந்து மகிழ்வார்கள். உம்முடைய பனி செடிகொடிகளின் மேல் பெய்யும் பனி போல இருக்கும். புதிய நேரம் வந்துகொண்டிருப்பதை இது காட்டும். ஜனங்கள் இப்போது பூமியில் புதைக்கப்படுகிறார்கள். ஆனால் பூமியானது மரித்தவர்களை வெளியே அனுப்பும்.”