Isaiah 26:21 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இதோ, பூமியிலுள்ள மக்களின் அக்கிரமத்தின்காரணமாக அவர்களை விசாரிக்க யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதோ, பூமியின் குடிகளை அவர்களுடைய பாவங்களுக்காகத் தண்டிப்பதற்கு, யெகோவா தனது உறைவிடத்தில் இருந்து வருகிறார். பூமி தன்மேல் சிந்தப்பட்ட இரத்தத்தை வெளிப்படுத்தும்; அது தன்மேல் கொலைசெய்யப்பட்டவர்களை இனிமேல் மறைக்கப் போவதில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இதோ, பூமியிலுள்ள மக்களின் அக்கிரமத்தின்காரணமாக அவர்களை விசாரிக்க கர்த்தர் தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
Tamil Bible Romanised 2017
ithoa, boomiyinudaiya kudiga'lin akkiramaththinimiththam avarga'lai visaarikkumpadi karththar thammudaiya sthaanaththilirunthu pu'rappattuvaruvaar; boomi than iraththappazhiga'lai ve'lippaduththi, thannidaththil kolaiseyyappattavarga'lai ini moodaathirukkum.
Tamil OV
இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் அவரது இடத்தை விட்டு உலக ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக நியாயந்தீர்க்க வருவார். கொல்லப்பட்ட ஜனங்களின் இரத்தத்தைப் பூமி காட்டும். இந்த ஜனங்களை இனி பூமி மூடி வைக்காது.