Isaiah 28:2 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இதோ, திறமையும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழையைப் போலவும், சங்காரப் புயல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பாருங்கள், யெகோவா பலமும் வல்லமையுமுள்ள ஒருவனை வைத்திருக்கிறார். அவன் கல்மழை போலவும் அழிக்கும் புயலைப் போலவும், பெருமழைபோலவும், வெள்ளப்பெருக்கு போலவும் அதைப் பலத்துடன் நிலத்தில் வீழ்த்துவான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இதோ, திறமையும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழையைப் போலவும், சங்காரப் புயல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
Tamil Bible Romanised 2017
ithoa, thiraa'niyum vallamaiyumudaiya oruvan aa'ndavaridaththil irukki'raan; avan kalmazhaippoalavum, sanggaarap pusalpoalavum, pura'nduvarugi'ra peruve'l'lampoalavum vanthu, kaiyinaalea athaith tharaiyil tha'l'lividuvaan.
Tamil OV
இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பார், எனது ஆண்டவர் பலமும் தைரியமும் கொண்டவராக இருக்கிறார். அவர் பெருங்காற்றும் கல்மழையும் கொண்ட நாட்டுக்குள் வருவார். அவர் ஒரு புயலைப்போன்று நாட்டுக்குள் வருவார். அவர் ஒரு சக்திவாய்ந்த ஆறு நாட்டுக்குள் பெருக்கெடுத்து வருவதுபோன்று இருப்பார். அவர் அந்தக் கிரீடத்தை (சமாரியா) தரையில் தள்ளுவார்.