Isaiah 3:8 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோனது; அவர்களுடைய நாவும், அவர்கள் செயல்களும், யெகோவாவுடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எருசலேம் நகரம் தள்ளாடுகிறது, யூதா நாடு வீழ்ச்சியடைகிறது; அவர்களின் சொல்லும் செயலும் யெகோவாவுக்கு விரோதமாக இருக்கிறது, அவர்கள் அவரின் மகிமையான சமுகத்தை துணிவுடன் எதிர்க்கிறார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோனது; அவர்களுடைய நாவும், அவர்கள் செயல்களும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.
Tamil Bible Romanised 2017
eanen'raal erusaleam paazhaakkappattathu, yoothaa vizhunthupoayit'ru; avarga'l naavum, avarga'l kiriyaiga'lum, karththarudaiya magimaiyin ka'nga'lukku erichchal u'ndaakkaththakkathaaga avarukku viroathamaayirukki'rathu.
Tamil OV
ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எருசலேம் விழுந்து தீமைசெய்ததால் இவ்வாறு நடைபெறும். யூதா விழுந்துவிட்டது. அது தேவனைப் பின்பற்றுவதை விட்டுவிட்டது. அவர்கள் சொல்லுகிறவையும், செய்கிறவையும் கர்த்தருக்கு எதிரானவை. கர்த்தருடைய மகிமையான கண்கள் இவை அனைத்தையும் காண்கின்றது.