Isaiah 30:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்ந்த சுவர் விழப் பிதுங்கி நிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்கிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் உயர்ந்த மதிலில் இருக்கும் வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, திடீரென ஒரு நொடியில் சரிந்து விழுவதுபோல, இந்தப் பாவம் உங்களையும் வீழ்த்தும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்ந்த சுவர் விழப் பிதுங்கி நிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்கிறார்.
Tamil Bible Romanised 2017
intha akkiramam ungga'lukku uyarntha suvaril vizhap pithunggini'rki'rathum, thideeren'ru sadithiyaay idiyappoagi'rathumaana vedippaippoala irukkum en'ru isravealin parisuththar sollugi'raar.
Tamil OV
இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்ந்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீங்கள் இவற்றைப்பற்றிய குற்றம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் விரிசல்களையுடைய உயரமான சுவர்களைப்போல இருக்கிறீர்கள். அந்தச் சுவர் விழுந்து சிறு துண்டுகளாக உடையும்.