Isaiah 42:22 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இந்த மக்களோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் இந்த மக்களோ கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் எல்லோருமே குழிகளில் அகப்பட்டும், சிறைச்சாலைகளில் மறைக்கப்பட்டும் இருக்கிறார்கள். அவர்கள் தம்மை விடுவிப்பாரின்றி கொள்ளைப் பொருளாகி, “அவர்களைத் திருப்பி அனுப்புங்கள்” என்று சொல்வாரின்றி அவர்கள் சூறையாவார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இந்த மக்களோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.
Tamil Bible Romanised 2017
intha janamoa ko'l'laiyidappattum, soo'raiyaadappattum irukki'raarga'l; avarga'l anaivarum kebiga'lilea agappattu, kaavala'raiga'lilea adaikkappattirukki'raarga'l; thappuvippaar illaamal ko'l'laiyaagi, vittuvidu enbaar illaamal soo'raiyaavaarga'l.
Tamil OV
இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் ஜனங்களைப் பாருங்கள். மற்ற ஜனங்கள் அவர்களைத் தோற்கடித்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பொருட்களைத் திருடியிருக்கிறார்கள். இளைஞர்களெல்லாம் பயப்படுகிறார்கள். அவர்கள் சிறைகளுக்குள் அடைப்பட்டிருக்கிறார்கள். ஜனங்கள் அவர்களிடமிருந்து பணத்தை எடுத்திருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற அங்கே எவருமில்லை. மற்ற ஜனங்கள் அவர்களின் பணத்தை எடுத்தார்கள். “அதனைத் திருப்பிக் கொடு” என்று சொல்ல அங்கே எவருமில்லை.