Isaiah 51:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
துன்பம் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய கடுங்கோபத்திற்கு எப்போதும் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? துன்பம் செய்கிறவனுடைய கடுங்கோபம் எங்கே?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வானங்களை விரித்து, பூமியின் அஸ்திபாரங்களை அமைத்த, உன் படைப்பாளரான யெகோவாவை நீ மறந்திருக்கிறாயே! அதனால் அழிக்கக் காத்திருக்கும் ஒடுக்குகிறவனுடைய கோபத்திற்கு தினமும் இடைவிடாமல் நீ அஞ்சுகிறாயே! ஒடுக்குபவனின் கடுங்கோபம் எங்கே?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
துன்பம் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய கடுங்கோபத்திற்கு எப்போதும் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? துன்பம் செய்கிறவனுடைய கடுங்கோபம் எங்கே?
Tamil Bible Romanised 2017
idukka'nseygi'ravan azhikka aayaththamaagi'rapoathu, nee avanudaiya ukkiraththukku niththam idaividaamal bayappadugi'rathenna? idukka'nseygi'ravanudaiya ukkiram enggea?
Tamil OV
இடுக்கண் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? இடுக்கண் செய்கிறவனுடைய உக்கிரம் எங்கே?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் உன்னைப் படைத்தார்! அவர் தமது வல்லமையால் பூமியைப் படைத்தார்! அவர் தமது வல்லமையால் பூமிக்கும் மேல் வானத்தை விரித்து வைத்தார். ஆனால், நீ அவரையும் அவரது வல்லமையையும் மறந்துவிட்டாய். எனவே, நீ எப்பொழுதும் கோபங்கொண்ட உன்னைப் பாதிக்கும் ஜனங்களுக்குப் பயப்படுகிறாய். அவர்கள் உன்னை அழிக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் இப்போது அவர்கள் எங்கே உள்ளனர்? அவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.