Isaiah 60:15 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ வெறுக்கப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஒருவரும் உன் வழியே நடவாமல் நீ வெறுக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்தபோதும், எல்லாத் தலைமுறைக்கும் நான் உன்னை நித்திய பெருமையாயும் மகிழ்ச்சியாயும் ஆக்குவேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ வெறுக்கப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.
Tamil Bible Romanised 2017
nee negizhappattathum, kaividappattathum, oruvarum kadanthu nadavaathathumaayirunthaay; aanaalum unnai niththiya maadchimaiyaagavum, thalaimu'rai thalaimu'raiyaayirukkum magizhchchiyaagavum vaippean.
Tamil OV
நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“நீ மீண்டும் தனியாகக் கைவிடப்படமாட்டாய். நீ மீண்டும் வெறுக்கப்படமாட்டாய். நீ மீண்டும் வெறுமையாக்கப்படமாட்டாய். நான் என்றென்றும் உன்னை பெரியவனாக்குவேன். நீ என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பாய்.