Isaiah 62:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சீயோனுக்காகவும் எருசலேமுக்காகவும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் பாதுகாப்பு எரிகிற தீப்பந்தத்தைப்போலவும் வெளிப்படும்வரை அமராமலும் இருப்பேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சீயோனின் நிமித்தம் நான் மவுனமாயிராமலும், எருசலேமின் நிமித்தம் நான் செயலற்று இராமலும், அதன் நீதி விடியற்கால வெளிச்சத்தைப் போலவும், அதன் இரட்சிப்பு பற்றியெரியும் ஒரு தீவட்டியைப் போலவும் வெளிப்படும்வரை அமராமலும் இருப்பேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சீயோனுக்காகவும் எருசலேமுக்காகவும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் பாதுகாப்பு எரிகிற தீப்பந்தத்தைப்போலவும் வெளிப்படும்வரை அமராமலும் இருப்பேன்.
Tamil Bible Romanised 2017
seeyoaninimiththamum erusaleaminimiththamum naan mavunamaayiraamalum, athin neethi piragaasaththaippoalavum, athin iradchippu erigi'ra theevattiyaippoalavum ve'lippadumattum amaraamalum iruppean.
Tamil OV
சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“சீயோனை நான் நேசிக்கிறேன். எனவே, நான் தொடர்ந்து அவளுக்காகப் பேசுவேன். எருசலேமை நான் நேசிக்கிறேன். எனவே, நான் பேசுவதை நிறுத்தமாட்டேன். பிரகாசமான வெளிச்சத்தைப்போன்று நன்மை ஒளிவீசும்வரை பேசுவேன். இரட்சிப்பானது சுவாலையைப்போன்று எரியும்வரை பேசுவேன்.