Isaiah 63:7 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் ஏற்றதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்திற்குச் செய்த மகா நன்மைக்கு ஏற்றதாகவும், யெகோவாவுடைய செயல்களையும், யெகோவாவுடைய துதிகளையும் பிரபலப்படுத்துவேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவினுடைய இரக்கத்தையும், அவர் புகழப்பட வேண்டிய செயல்களையும் நான் எடுத்துரைப்பேன். யெகோவா எங்களுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்குத் தக்கதாகவும், அவருடைய இரக்கத்தின்படியும், அவருடைய தயவுகளின் படியும், அவர் இஸ்ரயேல் குடும்பத்திற்குச் செய்த அநேக நற்செயல்களையும் நான் பறைசாற்றுவேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் ஏற்றதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்திற்குச் செய்த மகா நன்மைக்கு ஏற்றதாகவும், கர்த்தருடைய செயல்களையும், கர்த்தருடைய துதிகளையும் பிரபலப்படுத்துவேன்.
Tamil Bible Romanised 2017
karththar engga'lukkuch seytharu'lina ellaavat'ri'rkum thakkathaagavum, avar thammudaiya irakkangga'linpadiyum thammudaiya thira'laana thayavuga'linpadiyum, israveal vamsaththukkuch seytha mahaa nanmaikkuththakkathaagavum, karththarudaiya kiriyaiga'laiyum, karththarudaiya thuthiga'laiyum pirasthaabampa'n'nuvean.
Tamil OV
கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் தயவாக இருக்கிறார் என்று நினைவுகொள்வேன். கர்த்தரைத் துதிக்க நான் நினைவுகொள்வேன். கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்திற்குப் பல நல்லவற்றைக் கொடுத்தார். கர்த்தர் எங்களோடு மிகத் தயவோடு இருந்திருக்கிறார். கர்த்தர் எங்களிடம் இரக்கம் காட்டினார்.