Isaiah 8:19 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் உங்களை நோக்கி: ஜோதிடம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணுவென்று ஓதுகிற குறி சொல்கிறவர்களிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, மக்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
முணுமுணுத்து ஓதுகிற, ஆவிகளுடன் தொடர்புடையோரிடமும், குறிசொல்வோரிடமும் விசாரிக்கும்படி மனிதர் உங்களிடம் சொல்கிறார்கள். மக்கள் தங்கள் இறைவனிடம் அல்லவோ விசாரிக்கவேண்டும்? உயிருள்ளவர்களுக்காக மரித்தவர்களிடம் ஏன் விசாரிக்கவேண்டும்?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் உங்களை நோக்கி: ஜோதிடம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணுவென்று ஓதுகிற குறிசொல்கிறவர்களிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, மக்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
Tamil Bible Romanised 2017
avarga'l ungga'lai noakki: agnchanam paarkki'ravarga'lidaththilum, mu'numu'nen'ru oathugi'ra ku'rikaararidaththilum visaariyungga'l en'ru sollumpoathu, janangga'l than theavanidaththil visaarikkavea'ndiyathallavoa? uyiru'l'lavarga'lukkaagach seththavarga'lidaththil visaarikkalaamoa?
Tamil OV
அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம்பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சிலர், “என்ன செய்யலாம் என்பதையும் எதிர்காலம் பற்றி சொல்பவர்களையும், அஞ்சனம் பார்க்கிறவர்களையும் கேளுங்கள்” என்றனர். குறி சொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் பறவைகளைப்போன்று பேசுவார்கள். மறை பொருள் அறிந்தவர்கள் என்று கேட்பவர்கள் எண்ணும்படியாக கிசு கிசுத்து அவர்கள் பேசுவார்கள். ஆனால், நான் சொல்கிறேன் ஜனங்கள் உதவிக்காக தம் தேவனைக் கேட்க வேண்டும்! குறிசொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் என்ன செய்யலாம் என்று மரித்துபோனவர்களைக் கேட்கிறார்கள். உயிரோடு இருக்கிறவர்கள் மரித்துப்போனவர்களிடம் ஏன் இதுபோல் கேட்க வேண்டும்?