Jeremiah 28:16 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இல்லாமல் அகற்றிவிடுவேன்; இந்த வருடத்தில் நீ இறந்துபோவாய் என்று யெகோவா சொல்லுகிறார்; யெகோவாவுக்கு விரோதமாய்க் கலகம் ஏற்படப் பேசினாயே என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: நான் உன்னைப் பூமியிலிருந்து நீக்கிவிடப் போகிறேன். நீ யெகோவாவுக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசங்கித்திருக்கிறபடியால், இந்த வருடத்திலேயே நீ சாகப்போகிறாய்” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இல்லாமல் அகற்றிவிடுவேன்; இந்த வருடத்தில் நீ இறந்துபோவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் ஏற்படப் பேசினாயே என்றான்.
Tamil Bible Romanised 2017
aagaiyaal, ithoa, unnaip boomiyinmeal iraathapadikku agat'rividuvean; intha varushaththilea nee saavaay en'ru karththar sollugi'raar; karththarukku viroathamaayk kalagam u'ndaagap peasinaayea en'raan.
Tamil OV
ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே கர்த்தர் இதைத்தான் சொல்கிறார்: ‘அனனியா, உன்னை இந்த உலகத்தை விட்டு விரைவில் எடுத்துவிடுவேன். இந்த ஆண்டில் நீ மரிப்பாய். ஏனென்றால் நீ ஜனங்களை கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படிக் கற்பித்தாய்.’”