Jeremiah 4:11 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வனாந்திரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் மக்களாகிய மகளுக்கு நேராக வீசும் என்று அக்காலத்தில் இந்த மக்களுடனும் எருசலேமுடனும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்த வேளையில் இந்த மக்களுக்கும், எருசலேமுக்கும் சொல்லப்படுவதாவது, “பாலைவனத்திலுள்ள வறண்ட மேடுகளிலிருந்து ஒரு எரிக்கும் காற்று என் மக்களை நோக்கி வீசுகிறது. ஆனால் அது தூற்றுவதற்கோ அல்லது சுத்தப்படுத்துவதற்கோ ஏற்றதல்ல.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வனாந்திரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் மக்களாகிய மகளுக்கு நேராக வீசும் என்று அக்காலத்தில் இந்த மக்களுடனும் எருசலேமுடனும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.
Tamil Bible Romanised 2017
vanaantharaththilu'l'la uyarnilangga'lilirunthu, oru theekkaat'ru en janamaagiya kumaaraththikku nearaaga adikkum en'ru akkaalaththilea intha janaththoadum erusaleamoadum sollappadum; athu thoot'ravumaattaathu suththigarikkavumaattaathu.
Tamil OV
வனாந்தரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிக்கும் என்று அக்காலத்திலே இந்த ஜனத்தோடும் எருசலேமோடும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அந்த நேரத்தில், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கப்படும். “வறண்ட மலைகளிலிருந்து, ஒரு சூடான காற்று வீசுகிறது. இது எனது ஜனங்களிடம் வனாந்தரத்திலிருந்து வருகிறது. இது, உழவர்கள் தமது தானியங்களைப் பதரிலிருந்து, பிரித்தெடுக்கப் பயன்படுத்தும் காற்றைப் போன்றில்லை.