Jeremiah 42:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்திற்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனிதருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பார்கள்; நான் அவர்கள்மேல் வரச்செய்யும் தீங்கினால் அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உண்மையிலேயே எகிப்திற்குப்போய் அங்கே குடியிருப்பதற்குத் தீர்மானித்திருக்கிறவர்கள் அங்கே வாளினாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள். நான் அவர்கள்மீது கொண்டுவரப்போகும் பேராபத்துக்கு அவர்களில் ஒருவனாவது தப்புவதுமில்லை; மீதியாயிருப்பதுமில்லை.’
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்திற்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனிதருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பார்கள்; நான் அவர்கள்மேல் வரச்செய்யும் தீங்கினால் அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Bible Romanised 2017
egipthilea thanggavea'ndumen'ru avvidaththukkuth thangga'l mugangga'laith thiruppina ellaa manusharukkum enna sambavikkumen'raal, pattayaththaalum, pagnchaththaalum, ko'l'lainoayaalum saavaarga'l; naan avarga'lmeal varappa'n'num theengginaalea avarga'lil meethiyaagi'ravarga'lum thappugi'ravarga'lumillai en'ru isravealin theavanaagiya seanaiga'lin karththar sollugi'raar.
Tamil OV
எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள்; நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எகிப்துக்குச் செல்லவேண்டும் என்று முடிவு செய்த ஒவ்வொருவரும் வாள் அல்லது பசி அல்லது பயங்கர நோயால் மரிப்பார்கள். எகிப்துக்குப் போகிற ஒருவனும் உயிர் பிழைக்கமாட்டான். நான் அவர்களுக்குக் கொண்டு வருகிற பயங்கரமானவற்றிலிருந்து ஒருவன் கூட தப்பிக்கமாட்டான்.’