Jeremiah 44:30 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய எதிரியும் அவன் உயிரை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய எதிரிகளின் கையிலும், அவன் உயிரை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் உங்களுக்குக் கொடுக்கும் அடையாளம் இதுவே என்று யெகோவா சொல்கிறதாவது: ‘எகிப்திய அரசன் பார்வோன் ஓப்ராவை, அவனைக் கொல்லத் தேடுகிற பகைவரின் கையில் ஒப்புக்கொடுப்பேன். அது யூதாவின் அரசனான சிதேக்கியாவை, அவனைக் கொல்லத் தேடிய பகைவனான பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கும்’ என்கிறார்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய எதிரியும் அவன் உயிரை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய எதிரிகளின் கையிலும், அவன் உயிரை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Bible Romanised 2017
ithoa, naan yoothaavin raajaavaagiya sitheakkiyaavai, avanudaiya saththuruvum avan piraa'nanai vaanggath theadinavanumaagiya neabukaathneachchaar ennum baabiloan raajaavin kaiyil oppukkoduththathupoala, naan paarvoan oppiraa ennum egipthin raajaavaiyum, avanudaiya saththurukka'lin kaiyilum, avan piraa'nanai vaanggaththeadugi'ravarga'lin kaiyilum oppukkoduppean en'ru karththar sollugi'raar en'raan.
Tamil OV
இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத்தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய சத்துருக்களின் கையிலும், அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் என்ன சொன்னேனோ அதைச் செய்வேன் என்பதற்கு இதுவே உங்களது சான்றாகும்’ கர்த்தர் சொல்லுவது என்னவெனில், ‘பார்வோன் ஒப்பிரா எகிப்தின் ராஜா. அவனது பகைவர்கள் அவனைக் கொல்ல விரும்புகின்றனர். நான் பார்வோன் ஒப்பிராவை அவனது பகைவர்களிடம் கொடுப்பேன். யூதாவின் ராஜாவாக சிதேக்கியா இருந்தான். நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் பகைவனாக இருந்தான். நான் சிதேக்கியாவை அவனது பகைவனிடம் கொடுத்தேன். அதே வழியில் நான் பார்வோன் ஒப்பிராவை அவனது பகைவரிடம் கொடுப்பேன்’” என்று சொன்னான்.