Jeremiah 46:5 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலும் ஏற்பட்ட பயங்கரத்தினால் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் தோல்வியடைந்து, திரும்பிப்பாராமல் ஓட்டமாக ஓடிப்போகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் நான் காண்பது என்ன? அவர்கள் திகிலடைகிறார்களே! அவர்கள் பின்வாங்குகிறார்களே! அவர்களுடைய இராணுவவீரர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்களே! அவர்கள் திரும்பிப் பாராமல் விரைந்து தப்பி ஓடுகிறார்களே! எல்லாப் பக்கங்களிலும் பயங்கரம் இருக்கிறது” என்று யெகோவா அறிவிக்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலும் ஏற்பட்ட பயங்கரத்தினால் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் தோல்வியடைந்து, திரும்பிப்பாராமல் ஓட்டமாக ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Bible Romanised 2017
avarga'l kalanggi, pinvaanggugi'rathai naan kaa'ngi'rathenna? sut'rilumu'ndaana bayanggaraththinimiththam avarga'ludaiya baraakkiramasaaliga'l mu'riyu'ndu, thirumbippaaraamal oattamaay oadippoagi'raarga'l en'ru karththar sollugi'raar.
Tamil OV
அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் என்ன பார்க்கிறேன்? அந்தப் படை பயந்திருக்கிறது வீரர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தைரியமான வீரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் அவசரமாக ஓடினார்கள். அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. அவர்களைச் சுற்றிலும் ஆபத்து இருக்கிறது” கர்த்தர் இவற்றைக் கூறினார்.
Recommended Reading