Jeremiah 48:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ, நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போனது; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போனது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மோவாபைப் பற்றியது: இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “நேபோ நாட்டுக்கு ஐயோ கேடு! அது பாழாக்கப்படும். கீரியாத்தாயீம் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு கைப்பற்றப்படும். அதன் பலத்த அரண் அவமதிக்கப்பட்டு தகர்க்கப்படும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போனது; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போனது.
Tamil Bible Romanised 2017
moavaabaikku'riththu isravealin theavanaagiya seanaiga'lin karththar sollugi'rathu ennaven'raal, aiyoa! neaboa paazhaakkappattathu; keeriyaaththaayeem vedkappattu, pidikkappattuppoayit'ru; miskaab vedkappattu, kalanggippoayit'ru.
Tamil OV
மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போயிற்று; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போயிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இது மோவாபைப் பற்றிய செய்தி. இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறது: “நேபோ மலைக்கு கேடு வரும். நேபோ மலை அழிக்கப்படும். கீரியாத் தாயீம் தாழ்மைப்படும். இது கைப்பற்றப்படும். பலமான இடம் தாழ்மைப்படும். இது நொறுக்கப்படும்.