Jeremiah 49:31 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பயமில்லாமல் அலட்சியமாகக் குடியிருக்கிற தேசங்களுக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அதற்கு வாசல்களுமில்லை, தாழ்ப்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“தன்னம்பிக்கையுடன் சுகவாழ்வு வாழ்கிற நாட்டை எழுந்து தாக்கு” என்று யெகோவா அறிவிக்கிறார். “அது கதவோ, தாழ்ப்பாளோ இல்லாத ஒரு இனம். அதன் மக்கள் தனிமையாய் வாழ்கிறார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பயமில்லாமல் அலட்சியமாகக் குடியிருக்கிற தேசங்களுக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு வாசல்களுமில்லை, தாழ்ப்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.
Tamil Bible Romanised 2017
agnchaamal nirvisaaramaayk kudiyirukki'ra jaathikku viroathamaaga ezhumbippoangga'l en'ru karththar sollugi'raar; atha'rku vaasalga'lumillai, thaazhppaa'lga'lumillai; avarga'l thanippadath thanggiyirukki'raarga'l.
Tamil OV
அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிற ஜாதிக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு வாசல்களுமில்லை, தாழ்ப்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“பாதுகாப்பை உணர்கிற ஒரு தேசம் இருக்கிறது. அத்தேசம் பாதுகாப்பை உணர்கிறது. அந்தத் தேசத்திற்கு வாசலோ, வேலியோ பாதுகாப்புக்கு இல்லை. அவற்றின் அருகில் எவரும் இல்லை. கர்த்தர், ‘அத்தேசத்தைத் தாக்குங்கள்!’ என்றார்.