Jeremiah 52:3 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எருசலேமையும் யூதாவையும் யெகோவா தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றிவிடும்வரை, அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோன் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம் செய்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவின் கோபத்தினாலேயே எருசலேமுக்கும் யூதாவுக்கும் இவையெல்லாம் நடந்தன. முடிவில் அவர்களை தமது சமுகத்திலிருந்து அகற்றிவிட்டார். இந்த நேரத்தில் சிதேக்கியா பாபிலோன் அரசனுக்கு எதிராக கலகம் செய்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றிவிடும்வரை, அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோன் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம் செய்தான்.
Tamil Bible Romanised 2017
erusaleamaiyum yoothaavaiyum karththar thammudaiya samugaththaivittu agat'rith theeruma'lavum, avaiga'linmealu'l'la avarudaiya koabaththinaal ippadi nadanthathum allaamal, sitheakkiyaa baabiloanilea raajaavukku viroathamaagak kalagampa'n'ninaan.
Tamil OV
எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோன் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எருசலேமுக்கும் யூதாவுக்கும் பயங்கரமானவை நேர்ந்தது. ஏனென்றால் கர்த்தர் அவர்களுடன் கோபமாக இருந்தார். இறுதியாக, கர்த்தர் அவரது பார்வையிலிருந்து எருசலேம் மற்றும் யூதா ஜனங்களைத் தூர எறிந்தார். சிதேக்கியா பாபிலோன் ராஜாவுக்கு எதிராகத் திரும்பினான்.