Jeremiah 6:26 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் மக்களாகிய மகளே, நீ சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, சாம்பலில் புரண்டு, ஒரே மகனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; அழிக்கிறவன் திடீரென்று நம்மேல் வருவான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் மக்களே, நீங்கள் துக்கவுடை உடுத்தி, சாம்பலில் புரளுங்கள்; ஒரே மகனுக்காக மனங்கசந்து அழுவதைப்போல் துக்கப்படுங்கள். ஏனெனில் அழிக்கிறவன் நம்மேல் திடீரென வருவான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் மக்களாகிய மகளே, நீ சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, சாம்பலில் புரண்டு, ஒரே மகனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; அழிக்கிறவன் திடீரென்று நம்மேல் வருவான்.
Tamil Bible Romanised 2017
en janamaagiya kumaaraththiyea, nee irattaik kattikko'ndu, saambalilea pura'ndu, orea puththiranukkaagath thukkikki'rathupoala manangkasanthu pulambu; paazhaakkugi'ravan sadithiyaay nammeal varuvaan.
Tamil OV
என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
என் சாக்கு ஆடையை அணிந்துக்கொள்ளுங்கள். சாம்பலில் புரளுங்கள். மரித்த ஜனங்களுக்காக உரக்க அழுங்கள். ஒரே குமாரனை இழந்ததைப்போன்று அழுங்கள், இவற்றையெல்லாம் செய்யுங்கள்; ஏனென்றால், நமக்கு எதிரியான, அழிவுக்காரன் மிகவேகமாக வந்துக்கொண்டிருக்கிறான்.