Joel 1:5 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மது வெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சைரசம் குடிக்கிற அனைத்து மக்களே, புது திராட்சைரசத்திற்காக அலறுங்கள்; அது உங்கள் வாயிலிருந்து அகற்றப்பட்டது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
குடிவெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சை இரசம் குடிப்போரே, நீங்கள் எல்லோரும் இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்; ஏனெனில் அது உங்கள் வாயிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மது வெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சைரசம் குடிக்கிற அனைத்து மக்களே, புது திராட்சைரசத்திற்காக அலறுங்கள்; அது உங்கள் வாயிலிருந்து அகற்றப்பட்டது.
Tamil Bible Romanised 2017
ve'riyarea, vizhiththu azhungga'l; thiraadcharasam kudikki'ra sagala janangga'lea, puthu thiraadcharasaththinimiththam ala'rungga'l; athu ungga'l vaayinin'ru vilakkappattathu.
Tamil OV
வெறியரே, விழித்து அழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
குடியர்களே, விழித்து எழுந்து அழுங்கள். திராட்சைரசத்தைக் குடிக்கும் ஜனங்களே அழுங்கள். ஏனென்றால் உங்கள் இனிமையான திரட்சைரசம் முடிந்தது. நீங்கள் இனி அந்தத் திராட்சைரசத்தின் சுவையைப் பெறமாட்டீர்கள்.