John 12:40 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“கர்த்தர் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டார். அவர்களுடைய இருதயத்தையோ கடினப்படுத்திவிட்டார். இதனாலேயே அவர்கள் தங்களுடைய கண்களால் காணாமலும், தங்கள் இருதயங்களினால் உணராமலும் இருக்கிறார்கள். நான் அவர்களை குணமாக்கும்படி, அவர்களால் என்னிடம் மனந்திரும்பி வரமுடியவும் இல்லை.”
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“கர்த்தர் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டார். அவர்களுடைய இருதயத்தையோ மரத்துப் போகச் செய்தார். இதனாலேயே அவர்கள் தங்களுடைய கண்களால் காண முடியவும் இல்லை. தங்கள் இருதயங்களினால் விளங்கிக்கொள்ள முடியவும் இல்லை. நான் அவர்களைக் குணமாக்கும்படி, அவர்களால் என்னிடம் மனந்திரும்பி வர முடியவும் இல்லை.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.
Tamil Bible Romanised 2017
avarga'l ka'nga'linaal kaa'naamalum, iruthayaththinaal u'naraamalum, ku'nappadaamalum irukkumpadikkum, naan avarga'lai aaroakkiyamaakkaamal irukkumpadikkum, avarga'ludaiya ka'nga'lai avar kurudaakki, avarga'l iruthayaththaik kadinamaakkinaar en'raan.
Tamil OV
அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“தேவன் மக்களைக் குருடாக்கினார். தேவன் அவர்களின் மனதை மூடினார். அவர்கள் கண்களினால் பாராமலும் மனதின் மூலம் அறியாமலும் இருக்கவேண்டும் என்றே தேவன் இதைச் செய்தார். அதன்பின் அவர்களை நான் குணப்படுத்துவேன்.”