John 8:14 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கே இருந்து வருகிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு அதற்குப் பதிலாக, “நானே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தாலும், எனது சாட்சி உண்மையானதே. ஏனெனில் நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், நான் எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறியாதிருக்கிறீர்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இயேசு அதற்குப் பதிலாக, “நானே என்னைக் குறித்து சாட்சி கொடுத்தாலும், எனது சாட்சி உண்மையானதே. ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன் என்றும், நான் எங்கே போகின்றேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ, நான் எங்கிருந்து வந்தேன் என்றும், எங்கே போகின்றேன் என்றும் அறியாதிருக்கிறீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கே இருந்து வருகிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது.
Tamil Bible Romanised 2017
iyeasu avarga'lukkup pirathiyuththaramaaga: ennaikku'riththu naanea saadchi koduththaalum, en saadchi u'nmaiyaayirukki'rathu; eanenil naan enggeayirunthu vantheanen'rum, enggea poagi'reanen'rum a'rinthirukki'rean; neengga'loa naan enggeayirunthu varugi'reanen'rum, enggea poagi'reanen'rum a'riyeerga'l.
Tamil OV
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறெனென்றும் அறியீர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதற்கு இயேசு, “ஆம், என்னைப்பற்றி நானே பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்லுகின்றவற்றை மக்கள் நம்ப முடியும். ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேன் என்பது எனக்குத் தெரியும். அதோடு எங்கே போகிறேன் என்றும் எனக்குத் தெரியும். நான் உங்களைப் போன்றவன் இல்லை. நான் எங்கிருந்து வந்தேன் என்றும் எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது.