John 9:30 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதற்கு அவன், “இது வியப்பாயிருக்கிறது! என் கண்களை அவரே திறந்தார். அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தார் என்று உங்களுக்குத் தெரியாது என்கிறீர்களே.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அதற்கு அவன், “இது மிகவும் விசித்திரமாக இருக்கின்றது! நீங்களோ, அவர் எங்கிருந்து வந்தவர் என்பதே தெரியாது என்கின்றீர்கள். ஆனால் அவரோ எனக்குப் பார்வை தந்து என் கண்களைத் திறந்துவிட்டிருக்கின்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.
Tamil Bible Romanised 2017
atha'rku antha manushan: avar en ka'nga'laith thi'ranthirunthum, avar enggeayirunthu vanthavaren'ru neengga'l a'riyaathirukki'rathu aachchariyamaana kaariyam.
Tamil OV
அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதற்கு அம்மனிதன் “இது மிகவும் ஆச்சரியமான ஒன்று. இயேசு எங்கிருந்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் என் கண்களைக் குணப்படுத்தினார்.