Joshua 12:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோர்தான் நதிக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்ட நாட்டின் அரசர்கள் இவர்களே: யோர்தானுக்குக் கிழக்கே, அர்னோன் கணவாய் தொடங்கி, அரபாவின் கிழக்குப்பகுதி உட்பட எர்மோன் மலைவரையுள்ள அரசர்களுடைய நிலப்பகுதியை இஸ்ரயேலர் கைப்பற்றினர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோர்தானுக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
Tamil Bible Romanised 2017
yoarthaanukku appu'raththil sooriyan uthayamaagi'ra thisaiyilea arnoan aa'ru thuvakki ermoan malaimattum, kizhakkea samaboomi ellaiyilellaamu'l'la raajaakka'lai israveal puththirar mu'riya adiththu, avarga'ludaiya theasangga'laiyum suthanthariththukko'ndaarga'l.
Tamil OV
யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தில் இஸ்ரவேலரின் ஆதிக்கம் இருந்தது. அர்னோன் நதியிலிருந்து எர்மோன் மலைவரைக்குமுள்ள எல்லா தேசங்களும் யோர்தான் நதியின் கிழக்குக் கரையோரமுள்ள எல்லா தேசங்களும் அவர்களுக்கு உரியதாக இருந்தது. இப்பகுதிகளைக் கைப்பற்றும்பொருட்டு அவர்கள் தோற்கடித்த எல்லா ராஜாக்களின் பெயர்களும் இங்குத் தரப்படுகின்றன: