Joshua 22:10 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கானான் தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபனுடைய சந்ததியினர்களும், காத்தின் சந்ததியினர்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், அங்கே யோர்தான் நதியின் மேற்கு பகுதியில் பார்வைக்குப் பெரிதான ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ரூபனியர், காத்தியர், மனாசே கோத்திரத்தின் அரைப்பகுதியினர் ஆகியோர் கானான் தேசத்திலே யோர்தான் நதிக்கு அருகேயுள்ள கெலிலோத்துக்கு வந்தபோது, யோர்தானுக்கு அருகே மிகப்பெரிய தோற்றமுடைய பலிபீடம் ஒன்றைக் கட்டினார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கானான் தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபனுடைய சந்ததியினர்களும், காத்தின் சந்ததியினர்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள்.
Tamil Bible Romanised 2017
kaanaantheasaththil irukki'ra yoarthaanin ellaiga'lukku vanthapoathu, rooban puththirarum kaath puththirarum manaaseayin paathik koaththiraththaarum, anggea yoarthaanin oaraththilea paarvaikkup perithaana oru peedaththaik kattinaarga'l.
Tamil OV
கானான்தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரும் கீலேயாத் என்னும் இடத்திற்குச் சென்றார்கள். இந்த இடம் கானான் தேசத்தில் யோர்தான் நதிக்கு அருகே இருந்தது. அவ்விடத்தில் ஜனங்கள் ஓர் அழகிய பலிபீடத்தைக் கட்டினார்கள்.